தென்னாபிரிக்க அணியுடனான 5 ஆவது  ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 313 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜொஹான்னர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களைப் பெற்றது

Posted in விளையாட்டு | Leave a comment

வீதி ஒழுங்குகளை புறக்கணிக்கும் பாதசாரிகளுக்கு பொலிஸாரின் கட்டாய வகுப்பு

முறையற்ற விதத்தில் வீதியை கடக்கும் பாதசாரிகளை போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கான விசேட வகுப்புகளில் பங்குபற்றச் செய்யும் திட்டத்தை போக்குவரத்து பொலிஸார் அமுல்படுத்துகின்றனர்.

மஞ்சள் கடவை மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை புறக்கணித்துவிட்டு வீதியை கடப்பவர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்து, அவர்களின் விபரங்களை பதிவு செய்வதுடன் வகுப்புகளுக்கு சமுகளிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர்.

கொழும்பு நகரின் சில பகுதிகளில் இன்று வீதி ஒழுங்குகளை மீறிய பாதசாரிகள் பலரை எதிர்வரும் ஞாயின்று நடைபெறவுள்ள வகுப்பில் பங்குபற்றுமாறு பொலிஸார் உத்தரவிட்டனர். Continue reading

Posted in News | Leave a comment

யாழ் பல்கலைக்கழக அபிவிருத்திக்காக இந்தியா வழங்கவிருந்த 227 மில்லியன் ரூபா திட்டத்தை அரசாங்கம் நிறுத்திவைப்பு

யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தை அபிவிருத்தி செய்வதற்கும் கூடுதலான பயிற்சி வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இந்தியா வழங்க முன்வந்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 227 மில்லியன் ரூபா) திட்டத்தை அரசாங்கம் நிறுத்திவைத்துள்ளதாகவும் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மாப்பா பத்திரண,  தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் நேரடி கொடுக்கல் வாங்கல்களை வைத்துக்கொள்ளக்கூடாது என திறைச்சேரி தமக்கு அறிவித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் வி. அரசரட்னம் தெரிவித்தார்.

எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் பேரிலேயே யாழ். பல்கலைக்கழகம் இவ்வுதவியை பெறுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்ததாக அவர் கூறினார். Continue reading

Posted in News | Leave a comment

கடற்படையினரால் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் உட்பட இருவர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில்  தமிழீழ விடுதலைப் புலிகளின்  உறுப்பினர் ஒருவர் உட்பட இரண்டு பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக  கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

வாடகைக்கு அமர்த்தப்பட்ட படகு மூலம் பயணித்த இவர்கள் 8ஆம்  முதல் 9ஆம் வரையான மணல்த் திட்டுக்களுக்கு இடையில் நீந்திக்கொண்டிருந்தபோதே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர்  கடந்த 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி உறுப்பினராக பயிற்சி பெற்றதாகவும் 2006ஆம் ஆண்டு இந்தியாவுக்கு இவர் தப்பிச்சென்றதாகவும் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. Continue reading

Posted in News | Leave a comment

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் நவ்கத்தேகம பிரதேச செயலாளர் கைது

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில்  கைதுசெய்யப்பட்ட நவ்கத்தேகம பிரதேச செயலாளர் எதிர்வரும் 26ஆம் திகதிவரை பிணையில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் மொல்வெவ பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான மேற்படி பெண் செய்த முறைப்பாட்டை அடுத்து நவ்கத்தேகம பிரதேச செயலாளர் கைதுசெய்யப்பட்டார்.

நவ்கத்தேகம பிரதேச செயலாளர் இச்சம்பவத்தின்போது அரசாங்க வாகனத்தை பயன்படுத்தியதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ள நிலையில் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
Continue reading

Posted in News | Leave a comment

பங்களாதேஷ் பிரிமியர் லீக் ; ஜயசூரியவுக்கு 111,000 டொலர், முரளிக்கு 100,000 டொலர்

பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் விளையாடுவற்காக இலங்கை வீரர் சனத் ஜயசூரிய 110,000 டொலர் ஏலத்தில் குல்னா ரோயல் பெங்கால் அணியினால் வாங்கப்பட்டுள்ளார். அதேவேளை முத்தையா முரளிதரனை சிட்டகொங் கிங்ஸ் அணியினால் 11, 000 டொலர்களுக்கு  வாங்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் பிரிமியர் லீக்  சுற்றுப்போட்டி பெப்ரவரி 9 முதல் 29 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. Continue reading

Posted in விளையாட்டு | Leave a comment

தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர்கள் நாளை பகிஷ்கரிப்பு

இலங்கை தேசிய வைத்தியசாலையைச் சேர்ந்த 1200 வைத்தியர்கள் நாளை வெள்ளிக்கிழமை பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

இலங்கை மருத்துவ கவுன்ஸில் உறுப்பினர்கள் இருவரை நியமனம் செய்தமைக்கு எதிராகவும்  போக்குவரத்து அலவன்ஸ் மற்றும் பிரச்சினையான தருணத்தில் கடமைக்கு சமுகமளிப்பதற்கான படியும் அரசாங்கத்தினால் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மறுநாள் சனிக்கிழமை காலை 8 மணி வரை வைத்தியர்கள் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர்.
Continue reading

Posted in News | Leave a comment

பாடசாலை வான் விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு

ல்கிசையில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார்.

கல்கிசையில் நேற்று புதன்கிழமை காலை பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச்செல்லும் வானும் பஸ்ஸும் மோதி விபத்திற்குள்ளானதில் 9 பேர் காயமடைந்துள்ளனர். மேற்படி வான் 80 -100  கிலோமீற்றர் வேகத்தில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in News | Leave a comment

வட, கிழக்கிற்கான காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

தேசிய பாதுகாப்பு மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்கள் தவிர ஏனைய நோக்கங்களுக்கு காணிகள் விநியோகிப்பதை தற்காலிகமாக தடைசெய்வதான சர்ச்சைக்குரிய காணிச் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதற்கு காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை, சட்டமா அதிபரின் பிரதி சொலிஸ்டர் ஜெனரல் திருமதி முருது பெர்ணான்டோ இன்று வியாழக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இந்த சுற்றுநிருபத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட பொது அறிவித்தல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் தமது காணிகளை நவம்பர் மாதம் 20ஆம் திகதி 2011ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிய வேண்டுமென கூறியது.
Continue reading

Posted in News | Leave a comment

அதிவேக நெடுஞ்சாலையில் கல்வீச்சுகளால் 4 வாகனங்கள் சேதம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கஹதுடுவ எனும் இடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கல்வீச்சுகளினால் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாலை  4 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் மீது கற்களை வீசவேண்டாம் என பொலிஸ் எச்சரித்த அதே தினத்தில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. Continue reading

Posted in News | Leave a comment